Saturday, December 27, 2025

இந்தியாவில் முதல் டிரைவர் இல்லாத கார் அறிமுகம்

பெங்களூரு, தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணி நகராக மாறியுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதற்கேற்ற மாற்றங்கள் வருகின்றன. இத்தகைய மாற்றங்களின் தொடர்ச்சியாக, பெங்களூருவில் தற்போது டிரைவர் இல்லாத கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டிரைவர் இல்லாத கார், இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் இணைந்து, தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டது.

இந்த கார் முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. 2019-ம் ஆண்டிலிருந்து பல்வேறு கட்டங்களில் இந்த கார் சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, குறுகலான சாலைகளில் எப்படி செயல்படும், சாலையில் அனுமதியின்றி ஊர்வலமாக வரும் மாடுகள், ஆடுகள் அல்லது நாய்களிடம் எப்படி நடத்துவது, மற்ற வாகனங்களுக்கு வழி விடுவது போன்ற சோதனைகள் எடுக்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கார் வடிவமைக்கப்பட்டது.

இந்த கார் இந்தியாவின் முதல் டிரைவர் இல்லாத கார் என்று கூறப்படுகிறது. தற்போது அந்த கார் மற்றும் அதன் அறிமுக நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related News

Latest News