Wednesday, July 30, 2025

‘அமெரிக்கா’வோடு இந்தியா எடுத்த அதிரடியான முடிவு! மிரளப் போகும் பாகிஸ்தான் சீனா!

இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையும் ஒரு முடிவை இப்போது அமெரிக்கா எடுத்துள்ளது.பல வருடங்களாக நடந்த பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு,அமெரிக்கா தற்போது இந்தியாவுடன் போர் விமான எஞ்சின் தொழில் நுட்பத்தை பகிர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், அமெரிக்க பாதுகாப்பு துறை நிறுவனம்ஆன ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸுடன் இணைந்து,F-414 எனப்படும் சிறந்த சிறந்த போர் விமான எஞ்சின்களை இந்தியாவில் தயாரிக்கவுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தேஜாஸ் விமானங்களுக்கு புதிய உயிரை கொடுக்கப் போகிறது.

F-141 எஞ்சின் என்பது மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட ஒரு அதி நவீன எஞ்சின் ஆகும்.இதன் AFTER BURNING பவர் ஆனது சுமார் 22,000 பவுண்டுகள் ஆகும்.இது அதற்கு முந்தைய பதிப்பான F-404 ஐ விட 35 சதவீதம் அதிக சக்தியை வழங்குகிறது.இது மிகுந்த நம்பகத்தன்மை மற்றும் பராமரிக்க எளிமையான எந்திரமாகவும் இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் 80 சதவீத தொழில்நுட்பம் இந்தியாவிற்கு நேரடியாக மாற்றப்படும்.இதற்கான பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நிதியாண்டிற்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமானப்படை ஏற்கனவே சுமார் 180 தேஜாஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்தின் மதிப்பு மதிப்பு மட்டும் ரூ.1.15 லட்சம் கோடி.இதன் மூலம் பழைய மிக்21 விமானங்களை இந்தியா நீக்கிவிட்டு , முழுவதும் நவீன விமான சக்தியை கட்டி எழுப்ப போகிறது.

இந்த வளர்ச்சி நிச்சயமாக பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தும்.ஏனனில் இந்தியா தற்போது தொழில்நுட்ப ரீதியாக அவர்களை சமமாக எதிர்கொள்ளும் நிலையில் வந்துவிட்டது.சமீபத்தில் நடைபெற்ற சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா மேற்கொண்ட துல்லியமான தாக்குதல்கள்,உலக நாடுகளையே மெய்சிலிர்க்க வைத்துவிட்டன.

இப்போது போர் விமானங்களின் சக்தி ,ட்ரோன்களின் உத்தியோகப் பூர்வமான தாக்கங்கள் அனைத்தும் போரின் வெற்றிக்கு முக்கிய காரணமாகி வருகின்றன.சுருக்கமாக,உலகத்தில் நான்கு நாடுகளுக்கு மட்டுமே இருந்த இந்த தொழில்நுட்பம்,இப்போது இந்தியாவின் கையிலும் வரப்போகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News