ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்பு கடை ‘சுவர்ண ப்ரசாதம்’ என்ற புதிய இனிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த இனிப்பின் விலை ஒரு கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. இந்த இனிப்பு இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த இனிப்பாகும்.
24 காரட் உண்ணக்கூடிய தங்கத்தால் செய்யப்பட்ட இந்த இனிப்பு ஆயுர்வேத மற்றும் சுகாதார நன்மைகளையும் கொண்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
