Wednesday, October 1, 2025

இந்தியாவின் ₹15,000 கோடி ஸ்டெல்த் ஃபைட்டர்! களத்தில் டாடா, அதானி! யார் ஜெயிக்கப் போவது?

இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில், ஒரு புதிய, பொன்னான அத்தியாயம் எழுதப்படப் போகிறது! அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த ஒரு தொழில்நுட்பத்தில், இந்தியா இப்போது கால் பதிக்கப் போகிறது. ஆம், இந்தியாவின் சொந்த ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை (5th Generation Stealth Fighter Jet) உருவாக்கும் மெகா திட்டம், இப்போது வேகமெடுத்துள்ளது!

இந்த விமானத்தின் பெயர், AMCA- அதாவது, அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராஃப்ட் (Advanced Medium Combat Aircraft).

யார் இந்த பிரம்மாண்ட விமானத்தை உருவாக்கப் போகிறார்கள்?

இதுதான் இப்போதைய கோடி ரூபாய் கேள்வி! இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்காக, இந்தியாவின் ஏழு பெரும் தலைகள் போட்டியிடுகின்றன. முதன்முறையாக, பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சவாலாக, தனியார் துறை ஜாம்பவான்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

போட்டியிடும் நிறுவனங்களின் பட்டியல் இதோ:

டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்

அதானி டிஃபென்ஸ்

லார்சன் & டூப்ரோ (L&T)

கல்யாணி ஸ்ட்ராடஜிக் சிஸ்டம்ஸ்

மற்றும், இந்தியாவின் அனுபவமிக்க பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) போன்ற நிறுவனங்கள் போட்டியில் உள்ளது.

இதில் முக்கியமான விஷயம், இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வரலாற்றிலேயே, இதுதான் மிகப்பெரிய திட்டம்!

இந்த ஏழு நிறுவனங்களும் சமர்ப்பித்துள்ள ஏலங்கள் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களை, முன்னாள் DRDO விஞ்ஞானி, டாக்டர். ஏ. சிவதாணு பிள்ளை தலைமையிலான ஒரு நிபுணர் குழு ஆய்வு செய்யும். விமான வடிவமைப்பைப் புரிந்துகொள்வதிலும், உற்பத்தியிலும், சோதனையிலும் யாருக்குச் சிறந்த அனுபவமும், தொழில்நுட்பத் திறனும் இருக்கிறது என்பதை இந்தக் குழு மதிப்பீடு செய்யும்.

இந்த, AMCA-வின் சிறப்பம்சங்கள் என்ன? என்றால்,

இது வெறும் ஒரு போர் விமானம் அல்ல. இது ஒரு பறக்கும் கணினி!

எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல், கண்ணுக்குத் தெரியாமல் சென்று தாக்கும் திறன் கொண்டது.

இது ஒருங்கிணைந்த AI தொழில்நுட்பத்துடன், விமானிக்குத் துல்லியமான முடிவுகளை எடுக்க உதவும்.

மேலும்,மிக நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கி அழிக்கும்.

முக்கியமாக, ஆளில்லா ட்ரோன்களுடன் இணைந்து, ஒரு குழுவாகச் செயல்பட்டு, தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.

இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக, நான்கு முதல் ஐந்து முன்மாதிரி விமானங்களை (Prototypes) உருவாக்குவதற்காக மட்டும், 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு, நூற்றுக்கணக்கான விமானங்களுக்கான இறுதி ஆர்டரின் மதிப்பு, பல லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும்!

2030-களின் மத்தியில், இந்த AMCA விமானம், இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக மாறும். தேஜாஸ் போர் விமானத்தின் வெற்றிக்குப் பிறகு, AMCA திட்டம், “ஆத்மநிர்பர் பாரத்” அதாவது தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு உச்சகட்ட சாதனையாக அமையும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை வெல்லப் போவது யார்? டாடாவா, அதானியா, அல்லது அனுபவமிக்க HAL-ஆ? இந்தியாவின் எதிர்கால வான் பாதுகாப்பைத் தீர்மானிக்கப் போகும் இந்தப் போட்டியை, ஒட்டுமொத்த தேசமும் ஆவலுடன் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News