சந்தீப் என்ற நபர் ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று 200669 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த டிக்கெட் அவருக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. தனக்கு லாட்டரி கிடைக்கும் என்று அவர் ஒருபோதும் நம்பவில்லை. ஆனால், இறுதியில் அதிர்ஷ்டம் அவரது கதவைத் தட்டியது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.35 கோடி கிடைத்தது.
ஒரு சிறிய வேலையில் பணிபுரியும் சந்தீப், இப்போது ஒரு மில்லியனராகி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார். இந்தப் பணத்தை வைத்து தனது தந்தைக்கு சிகிச்சை அளிப்பதாகவும், இந்தியா திரும்பியதும் சொந்தமாகத் தொழில் தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.