அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக்ஷய் குப்தா (30) என்ற இளம் தொழிலதிபர் டெக்சாஸின் ஆஸ்டின் நகரில் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, தீபக் கண்டேல் என்ற மற்றொரு இந்தியர் திடீரென அவரை கத்தியால் தாக்கினார்.
இதையடுத்து பலத்த காயமடைந்த அக்ஷய் குப்தா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
காட்சிகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட கண்டேல் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்த போது, அக்ஷய் குப்தா தனது மாமாவைப் போலவே இருப்பதாகவும், அதனால்தான் அவரைக் குத்திக் கொன்றதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
அக்ஷய் குப்தாவிற்கும் குற்றம் சாட்டப்பட்ட தீபக் கண்டேலுக்கும் இடையே எந்த மோதலோ அல்லது வாக்குவாதமோ இல்லாத நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.