Tuesday, June 17, 2025

‘அணு ஆயுதத்தால்’ பொளந்து கட்டிய இந்தியா! வரிஞ்சு கட்டி நிற்கும் உலக நாடுகள்!

சமீபத்தில் நடந்த ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதங்கள் பாகிஸ்தானை தூசி தட்டியது. இந்த தாக்குதல் உலக நாடுகளையே வியக்க வைத்தது. இந்தியா உருவாக்கிய உள்நாட்டு ஆயுதங்கள் பாகிஸ்தான் மட்டும் அல்ல, துருக்கி, சீனா போன்ற நாடுகளின் ஆயுதங்களை விட சிறந்தவை என்பதையும் இந்த நடவடிக்கையால் உலகமே புரிந்து கொண்டது. இதே காரணமாக இப்போது இந்தியாவுக்கு சர்வதேச அளவில் பெரும் ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.

சமீபத்தில் இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு நிறுவனமான NIBE Limited, இஸ்ரேலிடமிருந்து ரூ.150 கோடி மதிப்பிலான — சராசரியாக 17.52 மில்லியன் டாலர் மதிப்புள்ள — பெரிய ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா இஸ்ரேலுக்கு 300 கிலோமீட்டர் வரை தாக்கக்கூடிய யுனிவர்சல் ராக்கெட் லாஞ்சர்களை உருவாக்கி அனுப்ப உள்ளது. இந்த லாஞ்சர்கள் உலகத்திலேயே மிகவும் நவீனமாகும், மேலும் இவை இந்தியாவில் தயாராகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது முதல் முறையாகும்.

இது ‘மேக் இன் இந்தியா’, ‘சுயசார்பு இந்தியா’ போன்ற முக்கியமான திட்டங்களுக்கு பெரும் ஆதரவாக அமைகிறது. இந்தியா இப்போது ஆயுத ஏற்றுமதியில் ஒரு புதிய கட்டத்திற்கு சென்றுவிட்டது. NIBE நிறுவனம் உலகளாவிய நிறுவனங்களுடன் பணியாற்றி, நவீன ஆயுதங்களை உருவாக்கி, இந்திய பாதுகாப்பு சக்தியை பலப்படுத்தி வருகிறது.

இதனுடன், இந்தியா – ரஷ்யா கூட்டணியிலும் ஒரு புதிய முன்னேற்றம். பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட புதிய மாடலை இந்தியாவில் உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த அதிநவீன ஏவுகணைகள் உத்தரபிரதேசத்தில் உள்ள புதிய தொழிற்சாலையில் தயாராக உள்ளன. இது இந்தியாவை உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நாடாக மாற்றும் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானை தூசி தட்டிய வெற்றியின் பின்புலத்தில் இப்போது இந்தியா, ஒரு ஆயுத சக்தியாகவும், உலக சந்தையில் ஒரு மிகப் பெரிய ஏற்றுமதி நாடாகவும் மாறி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news