ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 29ம் தேதி முதல், அனைத்து தபால் பொருட்களும், அவற்றின் மதிப்பைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். சுமார் ரூ.9,000 மதிப்புள்ள (100 டாலர்) பரிசுப் பொருட்களுக்கு மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய வரி விதிப்பு காரணமாக வரும் ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா போஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பார்சல்களை அனுப்ப பதிவு செய்தவர்கள், தபால் கட்டணத்தை திரும்பப் பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.