இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஐபோன்களின் ஏற்றுமதி கடந்த ஏப்ரலில் 76% அதிகரித்து, சுமார் 30 லட்சம் ஐபோன்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதே நேரத்தில், சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஐபோன் ஏற்றுமதி 76% குறைந்து, 9 லட்சம் மட்டுமே உள்ளது. இதன் மூலம் ஐபோன் ஏற்றுமதியில் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளியுள்ளது.
இந்த மாற்றத்தின் முக்கிய காரணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 150% வரி விதித்ததுதான். இதனால், ஆப்பிள் நிறுவனம் அதிக வரி செலுத்தாமல், இந்தியாவில் இருந்து ஐபோன்களை இறக்குமதி செய்ய விரும்பியுள்ளது.
இந்த மாற்றம் இந்தியாவின் தொழில்நுட்ப உற்பத்தி திறனை உலகளவில் மேலும் அதிகரிக்க உதவுகிறது. இந்தியாவில் ஃபாக்ஸ்கான், பெகட்ரான் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை ஐபோன்களை உற்பத்தி செய்கின்றன.