உலக நாடுகளை மிரளவிடும் இந்தியா! கையில் எடுத்த ‘பயங்கர பிளான்!

இந்தியா தற்போது மிகப் பெரிய ஒரு பாதுகாப்பு முன்னேற்றத்தை நோக்கி பயணித்து வருகிறது. ரூ.10,000 கோடி மதிப்பிலான அதிநவீன உளவு விமானத் திட்டம், இந்தியாவின் பாதுகாப்பு திறனை இன்னும் பலப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும். இந்தத் திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் போயிங், கனடாவின் பாம்பார்டியர்(Bombardier) போன்ற முன்னணி நிறுவனங்களிடமிருந்து மூன்று விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நம்முடைய சொந்த மண்ணிலேயே உளவு விமானங்களை உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்த திட்டம், பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, எதிரியின் தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் வகையில் விமானப்படைக்கு உதவியாக இருக்கும். I-STAR(ஐ-ஸ்டார்) எனப்படும் இந்த உளவு விமானங்கள், புலனாய்வு, கண்காணிப்பு, இலக்குகளை கண்டறிதல் போன்ற பணிகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறும். மிக உயரத்தில் இருந்து செயல்படக்கூடிய இந்த விமானங்கள், உளவுத்துறை நடவடிக்கைகளில் புதிய பரிமாணத்தை உருவாக்கும்.

இந்த I-STAR அமைப்புகள் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்படும். DRDO-வின் CABS அமைப்பு தற்போது முதற்கட்ட சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக, இந்தியாவும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு சமமாக, தனது சொந்த உளவு விமானங்களை உருவாக்கும் திறனை பெறும்.

இதனுடன் சேர்ந்து, ரஷ்யாவின் R-37M எனும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் திட்டத்தையும் ரஷ்யா எடுத்துள்ளது. இது ஒரு மெக் 6 வேகத்தில், 300 முதல் 400 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணைகள் எதிரி நாடுகளின் வான்வழி கட்டுப்பாட்டு அமைப்புகள், டேங்கர் விமானங்கள் மற்றும் தீவிரவாத மையங்களை அழிக்க திறன் பெற்றவை.

இந்த இரண்டு முன்னேற்றங்களும் சேர்ந்து, இந்தியா தனது வான்வழி பாதுகாப்பை உலக தரத்திற்கே உயர்த்தி வருகிறது. எதிரிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக, இந்தியாவின் ராணுவ சக்தி இன்று புதிய உயரங்களை தொடுகிறது.

Related News

Latest News