அமெரிக்கா வழங்கும் எச்1பி விசாக்களில் 5-ல் ஒரு பங்கை இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன. 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட எச்1பி விசாக்களில் 71 சதவீதம் அளவுக்கு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எச்1பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சமாக இருந்த நிலையில், அது இப்போது ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே 50 சதவீதம் வரி விதித்த நிலையில் டிரம்பின் இந்த திட்டம் நம் நாட்டின் ஐடி ஊழியர்களுக்கு பிரச்சனையாக உள்ளது.
இந்த சூழலில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி பிரதமர் மோடி வலிமையில்லாத பிரதமர் என்று விமர்சனம் செய்துள்ளார். எச் 1பி விசா கட்டண உயர்வு குறித்து பேசிய போது ‛நான் மீண்டும் சொல்கிறேன். இந்தியா வலிமையற்ற பிரதமரை கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
