எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தச் சேவை அக்டோபர் 26 முதல் தொடங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.