தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் 155 மில்லியன் டாலர் (ரூ.1,354 கோடி) அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதிரிப்பாகங்களின் இறக்குமதியில் தவறான தகவல்களை தெரிவித்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை கியா மோட்டார்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு இந்திய அரசு அதிகமான இறக்குமதி வரி விதிப்பதாக டெஸ்லா நிறுவனம் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தது.