சென்னையில் உள்ள பிரபல உணவகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

சென்னையில், வேளச்சேரி உட்பட பிரதான இடங்களில் உள்ள பிரபல உணவகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

வேளச்சேரியில் உள்ள பிரபல உணவகத்தில், காலை 7 மணிக்கு இனோவா காரில் வந்த 8 வருமான வரித்துறை அதிகாரிகள், பூட்டியிருந்த உணவகத்தின் பின்பக்க கதவு வழியே சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதேபோல், தரமணி, அண்ணா நகர், ஆயிரம் விளக்கு மற்றும் ஓ.எம்.ஆர் உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News