Wednesday, July 2, 2025

டெல்லியில் ஜி-20 மாநாட்டை முன்னிட்டு நகரை அழகுப்படுத்தும் பணிக்காக பள்ளி இடித்து தள்ளப்பட்டதில் ஏழை மாணவர்கள் நிர்கதியாகி உள்ளனர்…….

டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, நகரின் பல பகுதிகளை அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

பிரகதி மைதான் பகுதிக்கு முன் 9 ஆண்டுகளாக இயங்கி வந்த பள்ளிக்கூடம் ஒன்றை அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர். நீத்து என்ற சமூக சேவகர் தற்காலிக பள்ளிக்கூடம் ஒன்றை அமைத்து, அந்த பகுதியில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கி வந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய நீத்து, இடத்தை காலி செய்யும்படி அதிகாரிகள் வழங்கிய நோட்டீஸை எதிர்த்து, நீதிமன்றத்தை நாடியதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி, பள்ளிக்கூடத்தை அதிகாரிகள் ஒன்றும் செய்ய கூடாது என கூறப்பட்டது. ஆனால், பள்ளிக்கூடத்தை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு உள்ளது என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்று வந்த 35 ஏழை மாணவர்கள் செய்வதறியாமல் நிர்கதியாகி உள்ளனர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news