விரைவில் இந்தியாவில் பறக்கும் கார்

428
Advertisement

இந்திய வாகனச் சந்தையில் மாருதியுடன் இணைந்து ஏறக்குறைய 50 சதவிகித இடம் வகிக்கும் ஜப்பானிய நிறுவனம் சுசுகி மோட்டார். பறக்கும் கார் தயாரிக்கும் இலக்குடன் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜப்பானிய நிறுவனம் ஸ்கை ட்ரைவ். இரு நிறுவனங்களும் பறக்கும் கார் தயாரிக்க ஒப்பந்தம் செய்திருக்கின்றன.

அதிலும் அவற்றின் முதல் இலக்கும் இந்திய வாகனச் சந்தை என அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு பேர் பயணிக்கக்கூடிய பறக்கும் கார் தயாரிப்பில் ஸ்கைட்ரைவ் நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது. பூஜ்யம் மாசு வெளியிடக்கூடிய, பேட்டரியில் இயங்கும் பறக்கும் கார் மாதிரியை அமெரிக்காவின் லாஸ்வேகாசில் நடந்த வாகன கண்காட்சியில் ஸ்கைட்ரைவ் அறிமுகம் செய்தது. வர்த்தகரீதியான தயாரிப்புக்கு முதலீடுகளை எதிர்பார்த்திருந்த நேரத்தில், சுசுகி நிறுவனம் அதனுடன் கைகோர்த்துள்ளது.

பறக்கும் கார் தயாரிப்பு ஒப்பந்தத்தால் இந்தியாவில் இருசக்கர, நான்கு சக்கர வாகனத் தயாரிப்புடன் வானத்தையும் எட்டிப்பிடிக்க சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் திட்டம் நனவானால், வாகன நெரிசலில் தவிக்கும் பயணிகளின் இறக்கை கட்டிப் பறக்கும் கனவும் நனவாகலாம்!