2 பெண்களைத் திருமணம் செய்யாவிட்டால் சிறைத் தண்டனை

247
Advertisement

ஆண்கள் 2 பெண்களைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால், சிறையில் அடைக்கப்படும் விநோத வழக்கம் கொண்ட நாடு பற்றி வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்காவின் எரித்திரியா நாட்டில்தான் இந்தக் கட்டாயத் திருமணம் உள்ளது.
அங்குள்ள ஆண்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமாம். இல்லாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவார்களாம்…இரண்டாவது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால், முதல் மனைவியும் சிறையில் தள்ளப்படுவாராம்.

இரண்டு திருமணம் செய்துகொள்ள சொல்லப்படும் காரணம் என்ன தெரியுமா…?

பல உள்நாட்டுப் போர்களால் எரித்திரியாவில் ஆண்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகிவிட்டனராம்… அதனால் அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம்… பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாம்…. பெண்களுக்குப் பாதுகாப்பும் குறைவாகிவிட்டதாம்….அதைத் தொடர்ந்தே இந்த முடிவாம்…

என்றாலும், இந்த முடிவை பல நாடுகள் விமர்சித்து வருகின்றன….அதேசமயம் இந்த முடிவு சில ஆண்டுகளுக்கு முந்தைய முடிவு என்றும் கூறப்படுகிறது.

அரசின் இந்த முடிவைக்கேட்டு சில இளைஞர்கள் மகிழ்ச்சி அடையலாம்…..

நம் நாட்டிலோ 2 பெண்களைத் திருமணம் செய்த பல ஆண்கள் ஹோட்டலில்தான் சாப்பிடுகின்றனர். வீட்டுச் சாப்பாடு இல்லை என்று வருத்தத்தில் உள்ளனர் 2 பெண்களைத் திருமணம் செய்த இளைஞர்கள்.