மனைவியின் பிறந்த நாளை மறந்த கணவருக்கு சிறைத் தண்டனை அளிக்கும் நாடு பற்றிய தகவல் வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பசிபிக் பெருங்கடல் பகுதியிலுள்ள பாலிநேசன் தொகுப்பிலுள்ள சமோவா நாட்டில்தான் இந்த வித்தியாசமான சட்டம் உள்ளது. இந்த சட்டப்படி மனைவியின் பிறந்த நாளை மறப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
இதனால், என் பிறந்த நாளை கணவர் மறந்துவிட்டார் என மனைவி புகார் அளித்தால், உடனடியாக சிறைத்தண்டனை விதிக்கப்படுமாம். அப்புறமென்ன….மாமியார் வீட்டில் கம்பி எண்ண வேண்டியதுதான்.
ஒரு சின்ன ஆறுதல்…..முதன்முறையாக மறந்துவிட்டதாகத் தெரியவந்தால் மன்னிப்பு அளித்துவிடுவார்களாம். இரண்டாவது முறையாக மறந்துவிட்டதாகப் புகார் சென்றால், கம்பி எண்ணவேண்டியது உறுதிதானாம்..
இந்த சட்டத்தைக் கேட்டு நம்ம ஊர் கணவன்மார்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
திருமண நாளையே கெட்ட கனவாக மறந்துவிடும் ஆண்கள், மனைவியின் பிறந்த நாள் என ஒன்று உள்ளதா என்று கேட்பார்கள். இந்த நிலையில், நம்ம நாட்டிலும் இப்படியொரு சட்டம் வந்தால் என்ன செய்வது என்று கலங்கிப் போயுள்ளனர் சிலர்.
திருமணமே ஒரு சிறைத்தண்டனைதான். இதுல இன்னொரு சிறைத் தண்டனையா என்றுதானே கேட்குறீங்க
சரி கவலைய விடுங்க பாஸ், மனைவியின் பிறந்த நாளை உங்கள் செல்போன் நம்பர்போல மாற்றிவிடுங்க. மறக்காதுல்ல.