நுரையீரலை பாதுகாக்க நச்சுனு 10 டிப்ஸ்!

215
Advertisement

கருவில் குழந்தை உருவாகியதில் இருந்து கடைசி மூச்சு வரை, நாம் சுவாசிப்பதற்கு காரணமாக இருக்கும் முக்கியமான உடல் உறுப்பு நுரையீரல்.

பாதிக்கபட்டால் உயிருக்கே ஆபத்தாக மாறும் நோய்களில் இருந்து நுரையீரலை பாதுகாக்க சில வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.

புற்றுநோய் மற்றும் இதர நுரையீரல் நோய்களை ஏற்படுத்தக் கூடிய சிகெரெட், பீடி, புகையிலை பொருட்கள் பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும்.

வீட்டிற்குள் கொசுவர்த்தி, வாசனன் ஏற்றிய மெழுகுவர்த்தி உபயோகிப்பதை தவிர்ப்பதோடு புறா எச்சங்கள் வீட்டிற்கு அருகில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

குப்பை மற்றும் விறகு எரிக்கும் புகையை சுவாசிக்க கூடாது. சுத்தமான காற்றோட்டம் இல்லாத, அடைக்கப்பட்ட இடத்தில் உடற்பயிற்சி செய்ய கூடாது. நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்க தொடர்ந்து மூச்சுப்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

நிமோனியா வராமல் தடுக்கும் நியோமோகோக்கல் தடுப்பூசி எடுத்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மரபணு வழியாக நுரையீரல் நோய்கள் இருக்கும் குடும்பத்தில் அனைவரும் நுரையீரல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மூக்கில் இழுக்கும் எந்த ஒரு போதை பொருளும் நேரடியாக நுரையீரலை பாதிக்கும் என்பதால் அவற்றை தவிர்க்க அறிவுறுத்தும் மருத்துவர்கள், நுரையீரல் நோய்க்கு முக்கிய காரணமாக அமையும் காற்று மாசு குறைப்பில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர்.