இந்தியாவிற்கான இறக்குமதி வரி : ஹேப்பி நியூஸ் சொன்ன டிரம்ப்

வெள்ளை மாளிகையில் இந்தியா மற்றும் அமெரிக்கா தொடர்பாக அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அவர் இந்தியாவிற்கான இறக்குமதி வரிகள் விரைவில் குறைக்கப்படும் என்றும், வர்த்தக ஒப்பந்தம் நெருங்கி வரும் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

ரஷ்யா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்கா இந்தியாவைக் குற்றம்சாட்டி வந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்தியா மீது வரியை 50% ஆக அதிகரித்தது. ஆனால் அதன் பின் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு வரிகள் குறைக்கப்பட உள்ளன என்று கூறப்பட்டது.

டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாகவும், ரஷ்யா-உக்ரைன் போரை முடிப்பதில் இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இது இந்தியா-அமெரிக்கா உறவில் புதிய முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News