Wednesday, April 30, 2025

‘இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது… டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யுங்கள்’ அமெரிக்காவில் ஒலித்த இந்திய வம்சாவளி குரல்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல் என்று குற்றம் சாட்டியிருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பி. ஒருவர் டிரம்பை தகுதி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து சர்வதேச அரசியலில் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் அதிபர் நாற்காலியில் உட்கார்ந்து முதலே அவர் எடுத்து வரும் பல நடவடிக்கைகள் உலக அரங்கில் பேசுபொருளாகி வருகின்றன. சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவேன் என அதிபர் தேர்தலின் பரப்புரையின் போதே இது ஆரம்பித்துவிட்டது.

இந்த நிலையில்தான்,  என்பது குறிப்பிடத்தக்கதுயை சேர்ந்த எம்பியான ஸ்ரீ தனேடர் டிரம்பிற்கு எதிராக தகுதி நீக்க தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார். டிரம்ப் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் கொடுங்கோல் ஆட்சி மற்றும் அரசியல் அமைப்பு மீறல்கள் நடப்பதாகவும் ஸ்ரீ தனேடர் கூறியுள்ளதோடு அது மட்டும் இல்லாமல் டிரம்பிற்கு எதிராக, பதவி நீக்கம் ஆர்டிகிள் கொண்டு வரப்பட்டு இருப்பது பற்றி தனது எக்ஸ் தளத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது. பிறப்பின் மூலம் பெறும் குடியுரிமை, மனிதாபிமான உதவிகள் நிறுத்தம், நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் உள்ளிட்ட டிரம்பின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என்றும் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்பதால் டிரம்பிற்கு எதிராக தகுதிநீக்க தீர்மானத்தை அறிமுகம் செய்துள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையிலும் பிரநிதிதிகள் அவையிலும் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கே பெரும்பான்மை இருப்பதால் இந்த தீர்மானம் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

தென் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீ தனேடர், அமெரிக்காவுக்கு கடந்த 1979ம் ஆண்டு உயர் கல்வி பயிலுவதற்காக குடி பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news