மொபைல் போனால் இமான் அண்ணாச்சியின் தம்பிக்கு நேர்ந்த சோகம்! மக்களே உஷார்

76
Advertisement

‘மிஸ் பண்ணாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்க’ என்ற ஒற்றை வாசகத்தால் பிரபலமடைந்த இமான் அண்ணாச்சி திரைப்படங்களில் நடித்ததோடு, பிக் பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தவர் ஆவார்.

இமான் அண்ணாச்சியின் தம்பி செல்வகுமார் அருகம்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

வழக்கமாக நம்மில் பலருக்கும் வருவது போல பணம் வங்கிக்கணக்கில் போடப்பட்டிருக்கிறது.

Advertisement

இந்த லிங்கை கிளிக் செய்தால் பெற்றுக் கொள்ளலாம் என அவரது மொபைலுக்கு மெசேஜ் வந்துள்ளது. எப்போதும் அவற்றை தவிர்க்கும் செல்வகுமார், அந்த செய்தி பார்க்க professional ஆக இருக்கவே நம்பி கிளிக் செய்துள்ளார்.

வங்கி விவரங்களை பெற்ற பிறகு, மூன்று தவணைகளாக இவரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து அறுபத்து நாலாயிரம் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

வங்கிக்கு தொடர்பு கொண்டு கார்டை block செய்வதற்குள் பணம் சூறையாடப்பட்டதை அறிந்த செல்வகுமார் cyber crime போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.