உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் மழை, வெள்ளத்தில் தாராலி என்ற கிராமத்தின் பெரும்பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் மாயமானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், வடமேற்கு உத்தரப்பிரதேசம், கேரளா, மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையின் காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.