நடிகை வனிதா விஜயகுமார் இயக்கிய ‘மிஸஸ் & மிஸ்டர்’ திரைப்படம் இன்று வெளியானது. இந்தப் படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மற்றும் செஃப் தாமு, பவர்ஸ்டார் சீனிவாசன், ஷகீலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ‘மிஸஸ் & மிஸ்டர்’ படத்தில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி வைத்திருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் `ராத்திரி சிவராத்திரி’ பாடலை, தன்னுடைய அனுமதியில்லாமல் வனிதா விஜயகுமார் படத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த பாடலை நீக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.