அனுமதியின்றி தனது பாடல்களை வேறு படங்களுக்கு பயன்படுத்தியதாக சோனி மியூசிக், எக்கோ ரெகார்டிங், ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அப்போது, Dude திரைப்படத்தில் கூட தனது இரண்டு பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக இளையராஜா தரப்பு வாதம் முன்வைத்தனர். அது தொடர்பாக தனியாக வழக்குத் தொடரலாம் என நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
‘டியூட்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
