கல்லைக் கண்டால் காரும் மெதுவாகச் செல்லும்

114
Advertisement

‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்’
எனப் பழமொழி சொல்வார்கள்.

இதன் உண்மையான அர்த்தம் நாய் உருவில் உள்ள சிலையைக் கல் என்னும்
எண்ணத்தோடு பார்த்தால் நாய் உருவம் மனதில் தோன்றாது. அதே சிலை
நாய் என்னும் எண்ணத்தோடு பார்த்தால் கல் என்கிற எண்ணம் ஏற்படாது.

இந்தப் பழமொழிக்கும் இங்கு காணும் வீடியோவுக்கும் சம்பந்தமில்லை.
பொதுவாக, வாகனங்களை எந்தச் சாலையில் ஓட்டிச்சென்றாலும்
வேகமாகத்தான் பல டிரைவர்கள் ஓட்டுவர். மழைக்காலத்திலும்
கிட்டத்தட்ட இப்படித்தான்.

Advertisement

சாலையில் தண்ணீர் தேங்கி நின்றாலும் சரி, பள்ளத்தில் தண்ணீர் தேங்கி
நின்றாலும் சரி, சேறும் சகதியும் நிறைந்த மண் சாலையில் காரை ஓட்டினாலும்
நடந்து வருவோரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஓட்டிச் செல்லும்போது
சகதித் தண்ணீர் பட்டு பாதசாரிகள் கோபம்கொள்ளும்போது அந்த இடத்தைக்
கடந்துசென்றிருப்பார் கார்க்காரர்.

சேற்றுத் தண்ணீர் பட்ட ஆடைகளைப் புலம்பிக்கொண்டே மாற்றிய பிறகுதான்
நாமும் நிம்மதியாவோம். ஆனால், இங்கு சேறும்சகதியுமாக உள்ள மண் சாலையில்
கார் வருவதைக் கண்ட இளம்பெண் கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து கையில்
வைத்துக்கொள்ள, அதைக் கண்ட கார் டிரைவர் மெதுவாக காரை ஓட்டுகிறார்.
இதனால் சேறு தன் மீது படாமல் தப்பித்துக்கொள்கிறார் இந்த இளம்பெண்.

இனிமேல், இந்த டெக்னிக்கைக் கடைப்பிடித்துத் தப்பித்துக்கொள்ளலாமோ..?