Friday, August 8, 2025
HTML tutorial

நாட்டை விட்டு வெளியே போக முடியாது! இன்ஸ்டா,யூடியூப்னு எதுவுமே இல்ல! இப்படி ஒரு நாடா?

இன்ஸ்டாகிராம்ல ஒரு ரீல்ஸ் பாக்காம, யூடியூப்ல ஒரு வீடியோ பாக்காம, ஒரு நாள் கூட நம்மால இருக்க முடியுமா? நினைச்சுப் பார்க்கவே முடியல இல்லையா? ஆனா, இந்த உலகத்துல ஒரு நாடு இருக்கு… அங்க இன்ஸ்டாகிராம், யூடியூப்னு எதுவுமே கிடையாது. ஏன்… மொபைல்ல இன்டர்நெட்டே கிடையாது!

அந்த விசித்திரமான நாடோட பேருதான்… எரித்திரியா!

பொதுமக்களுக்கு இன்டர்நெட் இல்லாத உலகின் ஒரே நாடு இதுதான். மொபைல் டேட்டாவே கிடையாது. இன்டர்நெட் வேணும்னா, அங்கங்க இருக்கிற சில இன்டர்நெட் கஃபேக்களுக்குத்தான் போகணும். அங்கயும் ஸ்பீடு எப்படி இருக்கும் தெரியுமா? 2G-யை விட கம்மி!

சமீபத்துல அங்க போன ஒரு இந்திய பயணி சொன்னது நம்மள இன்னும் அதிர்ச்சியாக்குது. ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவே 5 லிருந்து 10 நிமிஷம் ஆகுமாம்! ஒரு போட்டோவையோ வீடியோவையோ டவுன்லோட் பண்றதெல்லாம் கனவுல கூட நடக்காதாம்.

ஏன் இந்த நாடு இப்படி இருக்கு? இது பின்தங்கிய நாடா? இல்லை… இதுக்கு காரணம், அங்க நடக்குற கடுமையான சர்வாதிகார ஆட்சிதான். அதனாலதான், எரித்திரியாவை ‘ஆப்பிரிக்காவின் வட கொரியா’-ன்னு சொல்றாங்க.

அதிர்ச்சிகள் இதோட முடியல. இந்த நாட்டுல ஏடிஎம் மெஷினே கிடையாது. எங்க போனாலும் கையில பணத்தோடதான் போகணும். சொந்தமா டிவி சேனல், செய்தித்தாள்னு எதுவுமே கிடையாது. அரசாங்கம் சொல்றது மட்டும்தான் செய்தி.

இன்னொரு பகீர் உண்மை என்னன்னா, அரசாங்கத்தோட அனுமதி இல்லாம, மக்கள் நாட்டை விட்டே வெளியே போக முடியாது. மீறிப் போக முயற்சி செஞ்சா, கண்டதும் சுடப்படலாம்னும் சொல்லப்படுது.

சுருக்கமா சொன்னா, எரித்திரியா ஒரு பின்தங்கிய நாடு இல்லை, அது முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாடு. நாம தினமும் சர்வசாதாரணமா பயன்படுத்துற இன்டர்நெட்டும், சுதந்திரமும் எவ்வளவு பெரிய வரம்னு இந்த நாட்டோட நிலைம நமக்கு புரிய வைக்குது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News