இந்த பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை உட்கொள்ளாதீர்கள்!

405
Advertisement

உணவின் சுவையை கூட்டவும்,சமையலின் நிறத்தை மாற்றவும் மஞ்சளை பயன்படுத்துவார்கள்,விழாக்கள் அனைத்திலும் மஞ்சள் மிக முக்கிய பங்குவகிக்கும்.

இத்தகைய சிறப்பு மிக்க இந்த மஞ்சளை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் என்ன ஆகும் என்பது பலரும் அறியாத ஒன்று.அளவுக்கு மீறிய மஞ்சள் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் ,மஞ்சளை அதிகமாக உட்கொள்வது இரத்தம் மெலிவதற்கு வழிவகுக்கும். ஏனெனில் இது இரத்த உறைதலைக் குறைக்க உதவுகிறது.

மஞ்சள் தினசரி உட்கொள்ளல் 2000 மி.கி க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் ஒருவர் குறைந்தது 500mg அளவு மஞ்சளை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உட்கொள்ளலாக இருக்கும்.

பித்தப்பை பிரச்சனைகள், இரத்தப்போக்கு கோளாறுகள், நீரிழிவு நோய், இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD), கருவுறாமை, இரும்புச்சத்து குறைபாடு, மற்றும் கல்லீரல் நோய்பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சளை எடுத்துக் கொள்ளக் கூடாது.கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்யப் போகிறவர்கள் போன்றோர்  மஞ்சளைப் பயன்படுத்தக் கூடாது