அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்காவில் விசா தொடர்பான நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நீரிழிவு நோய், அதிக எடை, இருதய நோய் போன்ற பல நாள்பட்ட நோய்களைக் கொண்டவர்கள் விசா விண்ணப்பிக்கும் போது நிராகரிக்கப்பட வாய்ப்பு உண்டு.
இதேபோல், ஆஸ்துமா, தூக்கப் பிரச்சனை, மனநோய் போன்ற நோய்களும், தடுப்பூசி போடாதவர்கள் ஆகியோருக்கும் விசா நிராகரிக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது.
இதுகுறித்து அமெரிக்க தூதரகங்களுக்கு அமெரிக்க அரசு பரிந்துரை வழங்கி உள்ளது. இது போன்ற நோய் உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்கான மருத்துவ செலவு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
