Monday, February 16, 2026

உங்களிடம் ATM, ரூபே கார்டு இருந்தால் 3 லட்சம் கிடைக்கும்! வங்கிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

RuPay மற்றும் ATM கார்டு வைத்துள்ளவர்களுக்கு காப்பீடு தொகையாக ஐந்து லட்சம் வரை பெற வழிவகை செய்யும் விதிகள் சில உள்ளன. முக்கியமாக அவர் தான் வாழ்நாளின் கடைசி 30 நாட்களுக்குள் ‘ரூபே கார்டை’ பயன்படுத்தி ஏதேனும் ஒரு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும் என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. முன்னர் இது  45 நாட்கள் என்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சில நாட்களுக்கு முன் நுகர்வோர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் இப்படி ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ATM கார்டு வைத்திருப்பவர்கள் விபத்தில் நிரந்தரமாக செயல்பட முடியாத நிலையை அடைந்தால் அல்லது இறந்து போனால், காப்பீட்டு கோரி அவரது நாமினி விண்ணப்பிக்க முடியும். Classic ATM கார்டு வைத்துள்ளவர்கள் ரூ 1 லட்சம் வரையும், பிளாட்டினமில் 2 லட்சம் ரூபாய் வரையும், சாதாரண மாஸ்டர் கார்டு என்றால் ரூ 50 ஆயிரம் வரையும் காப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம். பிளாட்டினம் மாஸ்டர் கார்டு வைத்திருப்பவர் என்றால் ரூ.5 லட்சம் வரையிலும், விசா கார்டு என்றால் ஒன்றரை முதல் 2 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை நாமினிக்கு வழங்கப்படும்.

Card உரிமையாளரின் நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று காப்பீட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ATM கார்டின் இலவச காப்பீட்டை விபத்தின் FIR நகல் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான certificate போன்ற ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து காப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்.

இதைப்போலவே RuPay Card விதிமுறைகளின்படி அதன் உரிமையாளர் அதனை பயன்படுத்தும் காலத்தில் இறந்து விட்டால் ரூ.5 லட்சம் வரை நஷ்ட ஈடாக பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் பயனாளர் இறப்பதற்கு 45 நாட்களுக்கு முன்பாக ‘RuPay Card-டை’ பயன்படுத்தி ஏதேனும் ஒரு பண பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாக இருக்கிறது.

Related News

Latest News