Tuesday, July 29, 2025

குளிக்காமலிருந்தால்…

தினமும் காலையில் தலைக்கு குளிப்பது நமது வழக்கம்.
சென்னையைப் பூர்வீகமாகக்கொண்டவர்களோ வாரம்
ஒருமுறையே தலைக்கு குளிப்பதாகச் சொல்லப்படுகிறது…

அன்றைய தினம் மச்சி இன்னைக்கு குளிச்சேன்பா என்று
பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள்.

ஆனால், தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்கிறார்கள்
சித்தர்கள். அப்போதுதான் அதிகப்படியான உடற்சூடு தணிக்கப்பட்ட
உடல் இயக்கம் சீரான இயக்கத்தைக் கொண்டிருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் தினமும் குளிப்பது முக்கியப் பங்காற்றுகிறது.
ஆரோக்கியமான ஒருவர் தினமும் காலையில் குளிக்க வேண்டும் என்பது
சித்தர்கள் சொல்லும் நியதி.

ஆனால், சிலர் ஏதாவது காரணங்களால் பல நாட்களால் குளிக்காமல்
இருப்பர். அப்படி குளிக்காமல் இருக்கக்கூடாது என்பது சித்தர்களின் அறிவுரை..
ஒருவர் இரண்டு நாட்கள் குளிக்காமல் இருந்தால் என்னாகும் என்பது பற்றி
அண்மையில் ஆய்வுசெய்துள்ளனர்… அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது, ஒருவர் தொடர்ந்து இரண்டு நாட்கள் குளிக்காமலிருந்தால்
ஆயிரம் வகையான பாக்டீரியாக்களின் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகக்
கண்டறிந்துள்ளனர்.

கண், காது, மூக்கு, தொடை இடுக்குகளில் கையால் நன்கு தேய்த்துக்
குளிக்க வேண்டும். ஏனெனில், இந்தப் பகுதிகள் பாக்டீரிக்களின் இருப்பிடம்.
இந்த பாக்டீரியாக்களை அழிக்க வேண்டுமானால் தினமும் குளிக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, தினமும் குளிக்காவிட்டால் உடலின் ஈரப்பதம் குறைந்து
உப்புத் திட்டுகள் ஏற்படுகிறது. இந்த உப்புத் திட்டுகள் தோல் தொற்று நோய்
ஏற்படக் காரணமாக அமைகின்றன என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடல்நலன் குன்றியவர்கள் ஈரத்துணியால் உடலைத் துடைத்துக்கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News