ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. பயனர்கள் கேட்கும் பல்வேறு சந்தேகங்களுக்கு கடகடவென பதில் அளிக்கிறது. அதேவேளையில் சாட் ஜிபிடியில் சில விஷயங்களை தேடினால் உங்களுக்கு சட்ட ரீதியில் பெரும் சிக்கல்கள் வந்து சேரும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
சாட் ஜிபிடியில் மேலும் புதிய அம்சங்கள் அப்டேட் செய்யப்பட இருக்கின்றன. சாட் ஜிபிடி வருகை காரணமாக பல வேலைகளும் எளிதாகிவிட்டன. ஏ.ஐ.-யைப் பொறுத்தவரை, சில குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடை அளிக்காது. அதாவது, பயனர்கள் கேட்கக் கூடிய சில வில்லங்கமான கேள்விகளுக்கு (restricted) செய்யப்பட்டுள்ளதாம்.
சாட் ஜிபிடியிடம் தற்கொலை, வெடிகுண்டை எப்படி உருவாக்குவது, குழந்தைகள் துன்புறுத்தல் உள்ளிட்ட கேள்விகளை கேட்கக்கூடாது. மீறி கேட்டால் அடுத்து கம்பிதான் எண்ண வேண்டியிருக்கும். உலகம் முழுக்க உள்ள அரசு அமைப்புகள் ஏ.ஐ. செயலிகள் சட்டவிரோத செயல்பாடுகள் எதுவும் இருக்கிறதா என கண்காணித்துக்கொண்டேதான் இருக்கின்றன.