Thursday, July 31, 2025

மூன்றாம் உலகப் போர் வெடித்தால் இந்த நாடுகளெல்லாம் சாம்பலாகும்! லிஸ்ட்டில் இந்தியா இருக்கா?

சமீப நாட்களாக சர்வதேச நாடுகளுக்கு இடையே எழுந்த மோதல்கள், உலகத்தின் அருகில் மூன்றாம் உலகப் போரை கொண்டுவந்து நிறுத்தியிருப்பது தான் கசப்பான உண்மை. அமெரிக்கா, ரஷ்யா, ஈரான் மற்றும் இஸ்ரேல் போன்ற வலிமை மிக்க நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே ஆங்காங்கு முளைத்த பல புதிய சக்திகளும் நேரடியாக போர் களத்தில் இறங்கியுள்ளன. குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு சில வல்லரசு நாடுகள் ஆதரவான கருத்துக்களை கூறி வருகின்றன. இந்நிலையில் மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் எந்தெந்த நாடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் உலகின் பாதுகாப்பான நாடாக ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து கருதப்படுகிறது. இரண்டாம் இடத்தில் அயர்லாந்தும் மூன்றாவது இடத்தில் நியூசிலாந்தும் நான்காவது இடத்தில் ஆஸ்திரியாவும் ஐந்தாவது இடத்தில் சுவிட்சர்லாந்தும் இருக்கின்றன. அடுத்தடுத்த இடங்களை சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

இதில் ஆச்சரியமான விஷயம் ஒன்றிருக்கிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 10 நாடுகளில் 8 நாடுகள் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்தவை என்பது தான் அது.

மட்டுமல்லாமல் மூன்றாம் உலகப் போர் வெடித்தால் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ரஷ்யாவும், உக்ரைனும் கருதப்படுகின்றன.

ரஷ்யா உக்ரைனுக்கு அடுத்தபடியாக சூடான், காங்கோ, ஏமன், ஆப்கானிஸ்தான், சிரியா, தெற்கு சூடான், இஸ்ரேல் மற்றும் மாலி ஆகிய நாடுகள் உள்ளன. இந்த லிஸ்ட்டில் இந்தியா இல்லை என்பது சற்றே ஆறுதலான ஒன்று.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News