கடைசியாக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் CSKவின் Play Off வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது. என்றாலும் இளம்வீரர்களுக்கு வாய்ப்பளித்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க சென்னை தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இந்தநிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய், அணி குறித்த உண்மையை நேரலையில் உளறிக்கொட்டி இருக்கிறார். சென்னை -ஹைதராபாத் இடையிலான போட்டியை ஸ்ரீகாந்த், முத்து, முரளி விஜய் மூவரும் இணைந்து கமெண்டரி செய்தனர்.
அப்போது ஸ்ரீகாந்த், ”பவர்பிளேவில் ஏன் பதிரனா, நூர் அஹமது ஆகியோருக்கு தோனி வாய்ப்பளிப்பது இல்லை?,” என்று கேட்டார். பதிலுக்கு முரளி விஜய், ” அந்த மாதிரி கேள்வி கேட்டதுக்கு தான் என்ன 2 மேட்ச் பெஞ்சுல உக்கார வச்சாங்க,” என்று பதில் அளித்தார்.
இதைப்பார்த்த முத்து, ” நீங்க இப்போ கிரிக்கெட் ஆடல. உங்க கருத்த சொல்லுங்க” என்றார். இதற்கு முரளி, ” இங்கயும் தோனிக்கு எதிரா பேச முடியாது. அப்புறம் இந்த வேலையும் போயிரும் ” என்று கிண்டலாக பதில் கூறினார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ” தோனி மேல ரொம்பவே வன்மமா இருக்கீங்க ப்ரோ. வேணும்னே சொன்ன மாதிரி தெரியுது,” என்று சமூக வலைதளங்களில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.