தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் தனுஷுடன் இணைந்து, சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகிறது.