சில மாதங்களுக்குமுன்பு விண்வெளி ஆராய்ச்சி வீரர்களுக்கு அசைவ உணவைத்
தனி ராக்கெட்டில் கொண்டுசென்று டெலிவரிசெய்து பிரம்மிக்க வைத்தனர்.
தற்போது விண்வெளி வீரர்களுக்காக இட்லியும் கொண்டுசெல்லப்பட உள்ளது.
விண்வெளி ஆய்வுக்காக சமீபத்தில் ராஜா சாரி என்ற இந்தியர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
அதேசமயத்தில் இந்திய விண்வெளி ஆய்வுமையமான இஸ்ரோ, சுகன்யான் திட்டத்தின்மூலம்
சாதாரண மனிதர்களையும் விண்வெளிக்கு அனுப்பி வைக்கத் தயாராகிவருகிறது.
இதற்காக 4 இந்தியர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு
விண்வெளிக்கு அவர்கள் அனுப்பப்பட இருந்தனர். ஆனால், கோவிட் 19 வைரஸ் காரணமாக
அந்தப் பயணத்திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், விண்வெளி செல்லும் இந்தியர்களுக்கான உணவில் இட்லியும் சட்னியும்
சாம்பாரும் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்துத் தற்போது ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. 2 ரூபாய் நாணய அளவில்
இந்த இட்லி இருக்கும் என்று தெரிவந்துள்ளது.
இதற்காக 700 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் அகச்சிவப்பு கதிர்வீச்சைப்
பயன்படுத்தி இட்லிகள் சமைக்கப்பட்டு உலர்த்தப்படுகின்றன. மீண்டும் மைக்ரோ
வேவ் மூலம் ஈரப்பதம் வெளியேற்றப்பட்டு உலர்த்தப்படுகிறது. என்றாலும் அதன்
சுவையோ மணமோ ஊட்டச்சத்தோ அப்படியே இருக்கும். ஆனால், இலேசான
பழுப்பு நிறத்துடன் அந்த இட்லி இருக்கும்.
இட்லி, சாம்பாரை வெந்நீர் சேர்த்த பிறகு சாப்பிடவேண்டும். சட்னியை மட்டும்
குளிர்ந்த நீர் சேர்த்து சாப்பிட வேண்டும். இப்படித் தயார்செய்யப்படும் இட்லிகள்
ஓராண்டுவரை கெடாமலிருக்குமாம். euro-sex
விண்வெளி வீரர்களுக்காகக் கொண்டுசெல்லப்படவுள்ள சப்பாத்தி, சிக்கன் பிரியாணி,
அல்வா, பாதாம் உள்பட 30 வகை உணவுப்பட்டியலில் தற்போது இட்லியும் இடம் பெற்றுள்ளது
எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.