ராஜஸ்தான் உயிரியல் பூங்காவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக விலங்குகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிகம் ஜெய்ப்பூரில் 107 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் நுஹர்கர் உயிரியல் பூங்காவில், விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரடிகளுக்கு புரதம் நிறைந்த சத்து மாவு, பழ ஐஸ்கிரீம் மற்றும் மான், நீர்யானைகளுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவை வழங்கப்படுகிறது.
விலங்குகள் திறந்தவெளி பகுதியில் அடைக்கப்பட்டு, வெப்பத்தை தணிக்கும் வகையில் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் குட்டைகள் அமைக்கப்பட்டு, விலங்குகள் இளைப்பாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.