Thursday, August 14, 2025
HTML tutorial

கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த லஞ்சப்பணம் : ஒடிசாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது

ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தில் உள்ள தரம்கர் துணை ஆட்சியராக திமான் சக்மா பணிபுரிந்து வந்தார். இவர் தொழிலதிபர் ஒருவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த தொழிலதிபரை தனது வீட்டிற்கு வரவழைத்த ஐஏஎஸ் அதிகாரி, தவணை முறையில் 10 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்து சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவர் வீட்டின் மேஜை டிராயரில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News