Monday, February 10, 2025

வெடிகுண்டுகளை வீசுவேன்..Be Careful, – சீமான் பேச்சால் மீண்டும் பரபரப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுகவும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து வருகிறார்.

சமீப காலமாக பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைகுரிய வகையில் பேசி வரும் நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்னொரு புறம் பிரபாகரனுடன் சீமான் எடுத்த புகைப்படம் போலி என சர்ச்சை கிளம்பியுள்ளது.

பெரியார் குறித்த பேச்சால் சீமான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை சீமான் பேசி வருகிறார்.

அந்த வகையில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நேற்று சீமான் பேசியதாவது: பிரபாகரனிடன் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள்.. நீங்கள் வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம்.. என் தலைவன் பிரபாகரன் கையில் வைத்திருப்பது வெடிகுண்டு.

நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு.. நான் உன் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டை உன் மீது வீசுகிறேன்.. என்ன நடக்கிறது என பார்…. ஏய்.. வெச்சிருக்கேன்.. இன்னும் வீசவில்லை.. வெடிகுண்டுகளை வீசினேன் என்றால் என்ன ஆவாய் என பார்த்துக் கொள்.. உன்னை புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது.. Be Carefull.. சேட்டையை வேறு எங்காவது வைத்துக் கொள் என சீமான் பேசியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest news