2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், தனது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி விஜய் வருகிறார். மேலும் தேர்தல் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறார் விஜய்..அண்மையில் விஜய் தவெக 2வது மாநாட்டை மதுரையில் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மதுரை கே.கே.நகரில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டாதார். அப்போது, அவருடன் செல்ஃபி எடுக்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது, தன்னையும், ஆண்ட்ரியாவையும் வைத்தே நகைக்கடையை திறப்பது ஏன் என கடை உரிமையாளரிடம் கேள்வி கேட்குமாறு செய்தியாளர் சந்திப்பை ஐஸ்வர்யா ராஜேஷ் கலகலப்பாக்கினார்.
இருவரும் கைராசியான நபர்கள் என்பதால் அவர்களை வைத்து கடைகளை திறப்பதாக உரிமையாளர் பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து, விஜய் அரசியலுக்கு அழைத்தால் வருவீர்களா என்று கேட்டதற்கு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு செல்லும் எண்ணம் இல்லையென தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது..