அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகம் முழுவதும் 5 போர்களை நிறுத்தியுள்ளேன் என பெருமிதத்துடன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தன்னுடைய ட்ரூத் எனப்படும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உலகளவில் 5 போர்களை நான் நிறுத்தி உள்ளேன்.மே மாதம் 10-ந்தேதி நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் உடனடியாக போரை நிறுத்த ஒப்புக்கொண்டது. உலகளவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை நான் முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு தெரியும் நாங்கள் மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம். இதில் 31 ஆண்டுகளாக நீடித்து வரும் காங்கோ-ருவாண்டோ நாடுகளுக்கு இடையேயான போரும் உள்ளடக்கம். நான் நிறைய போர்களை தீர்த்து வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.