நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு கூட்டு நெருக்கடியை எதிர்கொள்வது போன்ற சூழலில், தனிப்பட்ட விஷயங்கள் பொதுமக்களின் கருத்துக் கணிப்பில் விசாரிக்கப்படுவது வேதனையானது. இதை விட நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். எனது தனிப்பட்ட வாழ்க்கை உண்மையின்றி திரிக்கப்படுவது அதிர்ச்சிகரமாக இருந்தது. எனது மௌனம் பலவீனம் அல்ல. அது உயிர்வாழ்வதற்கான முயற்சி. ஆனால் எனது பயணத்தையோ அல்லது காயங்களையோ அறியாதவர்கள் எனது நேர்மையை கேள்விக்குள்ளாக்கும்போது, நான் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
எனது கடந்த கால திருமண உறவுகளை யாராவது தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ அல்லது புகழுக்கு முயற்சித்தால், அதை அனுமதிக்க மாட்டேன். இது என் வாழ்க்கை, என் உண்மை மற்றும் குணமடைந்து வரும் பாதை. சட்ட நடவடிக்கைகளில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அது உண்மையை வெளிச்சத்தில் கொண்டு வரும். தனது திருமண வாழ்க்கையில் பல ஆண்டுகளாக உடல், மன, உணர்ச்சி மற்றும் நிதி ரீதியான துன்பங்களை அனுபவித்தேன்.
அந்த ஆண்டுகளில் எப்போதும் நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தேன். என் திருமணத்தை குணப்படுத்தவும் காப்பாற்றவும் நான் முயன்றிருந்தாலும், உறுதியான முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தது. என் முன்னாள் மனைவி உட்பட அனைவரின் தனியுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதே என் நோக்கம். ஆனால் மௌனம் குற்றமாக கருதப்படுகிறது போல் தெரிகிறது.
எனது சமீபத்திய பொதுவெளி தோற்றங்களின் அடிப்படையில் ஒரு தந்தையாக என் பங்கு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நான் தெளிவாக கூறுகிறேன், இந்த கற்பனை கூற்றுகளை நான் மறுக்கிறேன். உண்மையின் பக்கம் நான் எப்போதும் நிலைத்திருக்கிறேன்.தற்போது நான் எடுத்த முடிவால் முன்பு எப்போதும் இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.