அமெரிக்க அதிபர் டிரம்புடன் இனி பேச விரும்பவில்லை என்றும் அதற்கு பதிலாக பிரதமர் மோடி உள்ளிட்ட பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன் என்று என பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்.
பிரேசில் மீது அமெரிக்கா கூடுதலாக 40 சதவீதம் வரி விதித்ததால், பிரேசில் நாடின் இறக்குமதிகள் மீதான மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்தது. இது இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதலை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பேசிய பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உட்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும் எனறு தெரிவித்தார்.
அதிபர் டிரம்பை இனி அழைக்கப் போவதில்லை என்று கூறிய அவர், டிரம்புடன்பேச விரும்பவில்லை என்றும் இருதரப்பு உறவுகளில் மிகவும் வருந்தத்தக்க நாள் எனவும் தெரிவித்தார். டிரம்புடன் பேசுவதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அழைப்பேன் என்று பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தெரிவித்தார்.