சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே தெரியாதவர்கள் இருக்க முடியாது.. அதைவிட அவருக்கு தனி ரசிகர்களின் கூட்டமே உள்ளது.. ஒவ்வொரு தனிப்பட்ட ரசிகர்களும் வெவ்வேறு ரகமாக இருப்பார்கள்..இங்கே ஒரு ரசிகர் அவரது தனிப்பட்ட திறமையால் ரஜினியின் ரசிகர் என்பதையும் தாண்டி திறமையால் சம்பாதிக்கவும் செய்திருக்கிறார்.. இதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
அதாவது, புதுச்சேரி வெளியாகும் ரஜினி படங்களுக்கான கட் அவுட்டுகளை வைப்பதில் ஓவியர் குமார் மற்றும் அவரது தம்பி அன்பு ஆகியோர் சிறப்பிடம் பெற்றவர்கள்.அப்போது திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பு அதற்கான கட்அவுட், பேனர்கள் மிகப்பெரிய வரவேற்பு பெறும்.சென்னையில் இருந்துதான் பேனர் கட் அவுட்டுகள் வரும் ஆனால், குமார் புதுசேரியில் வரைய தொடங்கியதும் அவரிடமே அனைத்தையும் கொடுத்தாக சொல்லப்படுகிறது..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மாவீரன் படம் வெளியான போது புதுச்சேரி முதலியார்பேட்டை சேர்ந்த ஓவியர் குமார் 60 அடி உயரத்தில் 30 அடி அகலத்தில் ரஜினி சங்கிலியை பிடித்துக் கொண்டிருப்பது போல பிரம்மாண்டமான கட் அவுட் வைத்தார். இரவிலும் கட் அவுட் தெரியும் வகையில் சீரியல் லைட்டுகளை அமைத்ததாக தெரிவித்தார்.
மேலும், தமிழக திரைப்பட விநியோகஸ்தர்களை திரும்பிப் பார்க்க வைத்த இந்த கட் அவுட்டை பார்த்த ரஜினிகாந்த் நேரடியாக குமாரை அழைத்து பாராட்டியதுடன் அவர் வினியோகம் செய்த உழைப்பாளி உட்பட அனைத்து படங்களுக்கும் பேனர் கட் அவுட்டை தயாரிக்கும் வேலையை ஓவியர் குமார் தெரிவித்தார். தனது 21 வயதில் ரஜினிகாந்த் கொடுத்த வேலையை தொடர்ந்து டி.ராஜேந்தர், கமலஹாசன் விஜயகாந்த், பாக்யராஜ், எம்ஜிஆர்,ஜெயலலிதா,கலைஞர் போன்றவர்களின் கட் அவுட்டுக்களையும் உருவாக்கி பிரபலமானார் ஓவியர் குமார்.
45 ஆண்டுகளாக ரஜினி படங்களை வரைந்து வருவதாக கூறும் குமார், தற்போது கூலி படத்தை வரவேற்கும் விதமாக பயனற்ற பெயிண்ட் டப்பாக்களை கொண்டு ரஜினி ஓவியம், பாட்டில் மூடிகளை கொண்டு 3D ரஜினி ஓவியம் போன்றவற்றை உருவாக்கியுள்ளார்.45 ஆண்டுகளாய் வரைந்து வரைந்து ரஜினியின் முகம் முழுமையாக தன்னுடைய மனதில் பதிந்து உள்ளதால் புதிய முயற்சியாக பிரெஸ் இன்றி விரலைக் கொண்டு “கூலி ரஜினி”யை வரைவதாக கூறினார்.
ரஜினியால்தான் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தன்னுடைய பிள்ளைகளும் இதேத்துறையில் இருப்பதாகவும் நவீன காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் ஓவியங்களை உருவாக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் மகிழ்வுடன் தெரிவித்தார் ஓவியர் குமார்.