Thursday, March 27, 2025

நான் சாலை விபத்தில் சிக்கவில்லை : நடிகர் யோகி பாபு விளக்கம்

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு பயணம் செய்த கார் இன்று அதிகாலை வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது.

இதையடுத்து நான் சாலை விபத்தில் சிக்கவில்லை நலமுடன் இருக்கிறேன் என நடிகர் யோகி பாபு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Latest news