தெலங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் வாட்ச் மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு ரேணுகா என்பவருடன் திருமணமாகியிருந்தது. சின்ன சின்ன விஷயத்துக்கு கூட குமார் – ரேணுகா இடையே பெரிய பெரிய சண்டை வந்து கொண்டிருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குமார், மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. தனக்கு சேலை வாங்கி தரச்சொல்லி குமாரிடம் ரேணுகா வாக்குவாதம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கணவன் – மனைவி இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ரேணுகா மிளகாய் பொடி எடுத்து, கணவன் குமாரின் முகத்தில் தூவியுள்ளார். இதில் எதிர்பாராத குமார் நிலை தடுமாறியுள்ளார். அப்போது ரேணுகா தனது புடவையால் குமாரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். மேலும் ரேணுகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.