தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவருடைய மனைவி நித்யாவுக்கு, மன்னார்குடியை சேர்ந்தவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து, தனது கள்ளக்காதலனுடன் நித்யா சென்று விட்டதால், வினோத்குமார், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனிடையே நேற்று மாலை வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறி உள்ளார்.
குழந்தைகளும் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை, ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, கொடூரத்தின் உச்சத்திற்கு சென்ற வினோத்குமார், தான் பெற்ற 3 குழந்தைகளையும் துடிக்க, துடிக்க சரமாரியாக கழுத்தை அறுத்துக்கொலை செய்தார். இதில் 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
பின்னர் வினோத்குமார், மதுக்கூர் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.
