கள்ளக்காதலை கண்டித்த கணவன்., மனைவி செய்த கொடூர செயல்

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனிமிரெட்டிப்பள்ளி கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் ஹனுமந்தராயுடு (43). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக இத்தம்பதி கல்யாணதுர்கம் மண்டலத்தில் உள்ள பழைய குளம் பகுதியில் வசித்து ஆடுகளை மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், சுகன்யாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர் ஹனுமந்தராயுடு, மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த தொடர்பை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுகன்யா, அருகில் இருந்த பெரிய கல்லால் கணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஹனுமந்தராயுடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை வீட்டின் பின்புறத்தில் சுகன்யா புதைத்துள்ளார்.

இந்த சம்பவத்தை அவர்களின் மகள் அம்ருதா பார்த்துள்ளார். ஆனால் இதை யாரிடமும் கூறினால் கொன்றுவிடுவேன் என்று தாய் மிரட்டியதால், அவள் இதுவரை அமைதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் தாய்-மகள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சுகன்யா தனது மகளை கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பயந்த அம்ருதா அங்கிருந்து தப்பித்து, தனது தந்தையின் சொந்த ஊரான ஹனிமிரெட்டிப்பள்ளிக்கு சென்று உறவினர்களிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சுகன்யா கல்யாணதுர்கம் கிராமப்புற போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News