”விவாகரத்து தரலன்னா, கோர்ட்லருந்து
அம்மணமாப் போவேன் …”
மனைவியின் மிரட்டலால் கணவன்
சொன்ன அதிரடி பதில்

181
Advertisement

”எனக்கு விவாகரத்து தரவில்லை என்றால், நீதிமன்றத்திலிருந்து
நிர்வாணமாகச் செல்வேன்” என்று மிரட்டிய மனைவிக்கு கணவன்
சொன்ன பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சௌதி அரேபியாவில்தான் அதிரடியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

அந்நாட்டில் அண்மைக்காலமாக அதிக எண்ணிக்கையில்
மணமுறிவுகள் ஏற்பட்டுவருகின்றன. ஒரு மணி நேரத்துக்கு
7 விவாக ரத்து வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஓர் ஆய்வு
தெரிவிக்கிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும் 57,300க்கும் அதிகமானோருக்கு
விவாகரத்து வழங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் விவாக
ரத்து வழக்குகள் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில்தான் ஒரு பெண் இப்படி மிரட்டியுள்ளார்.

விவாகரத்து தனது விருப்பத்துக்கு எதிரானது என்பதால்,
மனைவியின் விவாக ரத்து வழக்கை ரத்துசெய்யக்கோரி
அவளின் கணவர் ஷரியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதனால் வழக்கு நிலுவையில் இருந்துள்ளது.

ஆனால், மனைவியின் அதிரடி பதிலால் பயந்துபோன கணவர்
அடுத்த முறை நீதிமன்றத்துக்கு வரும்போது விவாகரத்துக்கு
சம்மதித்துவிடுகிறேன் என்று கூறிவிட்டார்.

அண்மையில் நிகழ்ந்துள்ள இந்த அதிர்ச்சியான சம்பவத்தை
அங்குள்ள கல்ஃப் நியூஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.