மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் காரின் பின்பகுதியில் இருந்து ஒரு மனித கை வெளியே தொங்க, கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அந்த காரை பின் தொடர்ந்து வந்த ஒருவர் அதிர்ச்சி அடைந்து அதை வீடியோ எடுத்தார். வீடியோ போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தவுடன், நவி மும்பை போலீசார் நடவடிக்கையில் இறங்கினர்.
விசாரணையில் அந்த கை ஒரு prank என்பதும், அது ஒரு லேப்டாப் கடையின் விளம்பர வீடியோ என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, காரின் ஓட்டுநர் உட்பட மூன்று பேரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.